அதனைத்தொடர்ந்து, அவ்வளாகத்திலுள்ள வீரத்தாய் குயிலி அவர்களின் நினைவுச்சின்னத்திலும் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில், இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி வெற்றி கண்டு, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த முதல் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 293-வது பிறந்த நாள் விழா இன்றையதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்ட தியாகச்செம்மல்களை என்றென்றும் போற்றி பாதுகாக்கும் வண்ணம், நினைவு மண்டபங்கள் அமைத்து பாதுகாத்து வந்தத் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆவார்கள். அவ்வழியில் சிறப்பான ஆட்சியினை தமிழகத்தில் நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட தமிழர்களின் அளப்பறியாப் பங்கு குறித்தும், வீரர்களின் தியாகம் குறித்தும், போராட்டங்கள் குறித்தும், தாய்மொழியான தமிழ்மொழி குறித்தும், வீரம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவைகளில் பங்கு பெற்ற முன்னோர்களை கௌரவிக்கும் பொருட்டும், இதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர், பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்தவகையில், இந்தியா வரலாற்றில் முதல் பெண்மணியாக சுதந்திரத்திற்காக தனித்து நின்று போராடிய வீரமங்கை வேலுநாச்சியார், பிறந்த சிவகங்கை மாவட்டத்தில், இவ்வீரப் பெண்மணிக்கு நினைவு மண்டபம் அமைத்து, ஆண்டுதோறும் அவர்களின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடும் வகையில், அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்படி இன்றையதினம் அவர்களது 293-வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், இந்திய விடுதலைப் போரில் தமிழர்களின் பங்களிப்பினை வெளிக்கொணரவும் தமிழ் சமூகத்தின் கலாச்சாரம் பண்பாட்டினை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 13.08.2022 அன்று வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வரலாறு கூறும் இசையார்ந்த நாடகத்தினை சென்னை கலைவாணர் அரங்கில் துவக்கி வைத்தார்கள். அந்நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து, 30.08.2022 அன்று சிவகங்கை அரண்மனை வளாகத்தில் இசையார்ந்த நாடக நிகழ்ச்சி நடைபெற்று, அதன்மூலம் வெள்ளையனை வீரப்போர் புரிந்து எதிர்த்து, எதிரிகளை துவம்சம் செய்த காட்சிகளை கண் முன் எடுத்துக்காட்டும் நிகழ்வாக சிறப்பாக நடைபெற்றது.
இதுபோன்று சுதந்திரப் போராட்டத் தியாகிகளை போற்றிடும் வகையில், அவர்களை கௌரவித்தும், இளையதலைமுறையினருக்கு முன்மாதிரியாக திகழும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர், சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், மதிப்பிற்குரிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், சிவகங்கை மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் பெண்கள் காவலர் பயிற்சி கல்லூரி அமைத்துத்தருமாறு அரசிடம் வைத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு, இடம் தேர்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.த.செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி மன்றத் தலைவர் மணிமுத்து (காஞ்சிரங்கால்) மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment