மஞ்சப்பை ஊக்குவிக்கும் விதமாக விருதுகள்: ஆட்சியர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 23 December 2022

மஞ்சப்பை ஊக்குவிக்கும் விதமாக விருதுகள்: ஆட்சியர்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாகப்பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில், முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை  வழங்கி கவுரவிக்க முன் வந்துள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தகவல் தெரிவித்தார்.


மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில்,  சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர், 2022-2023-ஆம் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மஞ்சப்பை விருதுகளை அறிவித்தார்.


ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியக்கூடிய நெகிழி பைகள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணிப்பை) மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த மஞ்சப்பை விருது வழங்கப்படும்.


சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர், அறிவிப்புக்கிணங்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாகப்பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக  மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞசப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன் வந்துள்ளது.


இதற்கான விண்ணப்பப் படிவங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பப் படிவத்தில் தனிநபர் / நிறுவனத்தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு நகல்கள் மற்றும் குறுவட்டு பிரதிகள் (இரண்டு எண்ணிக்கைகள்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 01.05.2023-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad