அஜ்மீர் மற்றும் அயோத்யா ஆகிய இரு ரயில்களும் நின்று செல்ல கோரிக்கை ராமேஸ்வரம் - அஜ்மீர் மற்றும் அயோத்யா ஆகிய இரு ரயில்களும் காரைக்குடி, சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும் என ரயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருச்சி - சென்னை இடையே இயங்கும் ராக்போர்ட், ஹவுரா எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களையும் காரைக்குடி, சிவகங்கை வழியாக மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும். காரைக்குடியில் 4 பிளாட்பாரத்திலும் ரயில் பெட்டிகளை குறிப்பிடும் டிஜிட்டல் போர்டு வைக்க வேண்டும்.
அதே போன்று தேவகோட்டை ரஸ்தாவிலும் நிறுவ வேண்டும். ராமேஸ்வரத்தில் இருந்து பனாரஸ் வரை ஓடும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை சிவகங்கையில் நிறுத்த வேண்டும். சிவகங்கை - இளையான்குடி ரோட்டில் இந்திரா நகர் அருகே ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என மதுரை கோட்ட மேலாளர் தலைமையில் நடந்த ரயில் பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் வலியுறுத்தினர்.

No comments:
Post a Comment