அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கிப் போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவிகள் சாதனை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 November 2022

அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கிப் போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவிகள் சாதனை.


அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கிப் போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவிகள் இரண்டாம் பரிசையும், மாணவர்கள் மூன்றாம் பரிசையும் பெற்றனர். அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கிப் போட்டி அழகப்பா அரசு கலைக்  கல்லூரியின் சார்பில் அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த ஹாக்கிப் போட்டியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் அணி இரண்டாம் பரிசை பெற்றது. 

மேலும் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் கலைச்செல்வி, சந்தியா, ஜஸ்டி, வைஷ்ணவி, சாருலதா ஆகிய ஐந்து மாணவிகள்  அழகப்பா பல்கலைக்கழக ஹாக்கி அணிக்குத்  தேர்வாகி டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற இருக்கின்ற தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கிடையிலான பெண்களுக்கான ஹாக்கிப் போட்டியில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பில் இவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 


மேலும் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் மாணவர்கள் அணி மூன்றாம் பரிசை பெற்றது. அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் மாணவர்கள் கோபிநாத், ஜான் வெஸ்லி, தனுஷ் ராம், ஆகாஷ் ஆகிய நான்கு மாணவர்களும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு டிசம்பரில் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கிடையிலான  ஆண்களுக்கான ஹாக்கிப் போட்டியில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, உடற்கல்வி இயக்குனர்  அசோக்குமார் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment

Post Top Ad