தீபாவளி பட்டாசு வெடிக்க கட்டுபாடு: ஆட்சியர் அறிக்கை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 October 2022

தீபாவளி பட்டாசு வெடிக்க கட்டுபாடு: ஆட்சியர் அறிக்கை.

உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தீபாவளி பண்டிகை மற்றும் திருவிழாக்காலங்களை முன்னிட்டு அனுமதி வழங்கப்பட்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. மாவட்டத் ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,  அறிவுறுத்தியுள்ளார்.


2022-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை மற்றும் திருவிழாக்காலங்களை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில், வெடிபொருள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் மாண்பமை உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றி விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் அனுமதி வழங்கப்பட்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. பொதுமக்கள் குறைந்த ஒலி மற்றும் குறைந்த மாசு ஏற்படுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பேரியம் ரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. 


தடை செய்யப்பட்ட சரவெடி உள்ளிட்ட பட்டாசு வகைகளை பொதுமக்கள் வெடிக்கக்கூடாது. மேலும், மருத்துவமனைகள் வழிபாட்டுத்தலங்கள் அமைதி காக்கப்படும் இடங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி  தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad