அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 July 2022

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி.

இளைஞர் சுய உதவிக்குழு சார்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திருவள்ளுவர் இளைஞர் சுய உதவிக்குழு சார்பில் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


மானாமதுரை குலாலர் தெருவில் செயல்படும் திருவள்ளுவர் இளைஞர் சுய உதவிக்குழுவின் 20 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு குழுவின் தலைவரும், தனியார் அச்சக உரிமையாளருமான தேவதாஸ் தலைமை வகித்தார். 


குழுச் செயலாளர் நாகலிங்கம் முன்னிலை வகித்தார், விழாவில் செர்டு இயக்குநர் எல். பாண்டி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடந்த கல்வியாண்டில் குலாலர் தெரு பகுதியில் அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினார். 


விழாவில் வாகுடி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், வேதியரேந்தல் தலைமை ஆசிரியர் சபரிராஜன், ஆசிரியர் சக்கரவர்த்தி, மண்பாண்ட கூட்டுறவு சங்கத் தலைவர் லெட்சுமணன், மானாமதுரை நகர்மன்ற உறுப்பினர் நதியாசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். துணைச் செயலாளர் அடைக்கலம் வரவேற்றார். உதவித் தலைவர் சங்கர் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad