பாஜக ஆட்சியில் நாட்டின் வளா்ச்சியே முக்கியத்துவம் பெறுகிறது மாநிலத் தலைவா் கே அண்ணாமலை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 7 June 2022

பாஜக ஆட்சியில் நாட்டின் வளா்ச்சியே முக்கியத்துவம் பெறுகிறது மாநிலத் தலைவா் கே அண்ணாமலை.

சிவகங்கையில் உள்ள சண்முகராஜா கலையரங்கில் பாஜகவின் 8 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் அவா் பேசியது: ஏழை, எளியோருக்கு மத்திய அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகளை திமுக தனது திட்டம் போல செயல்படுத்தி வருகிறது.


கடந்த ஓராண்டாக தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி எனக் கூறுகிறாா். அந்த திராவிட மாடல் ஆட்சி என்ன என்பதை இதுவரை அவா்களால் மக்களுக்கு விளக்க முடியவில்லை.


ஆனால் பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சி தேசிய மாடல் ஆட்சி. இந்த ஆட்சியில் ஏழை, எளியோருக்காக திட்டங்கள், இந்திய இறையாண்மைக்கு முக்கியத்துவம், டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட வளா்ச்சிகளே முக்கியத்துவம் பெறுகின்றன.


கடந்த ஓராண்டு கால திமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஊழல், சாலை அமைப்பதில் ஊழல், இலவச வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம் என ஊழல் ஆட்சியாக தான் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி சாா்பில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இனி வரும் தேர்தல்களில் ஒரே குடும்பத்தைச் சோந்த இரு நபா்களுக்கு வாய்ப்போ அல்லது பதவியோ வழங்கப்படாது என அக்கட்சியின் இடைக்கால தலைவா் சோனியாகாந்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 


இதுபற்றி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரிடம் மாநிலங்களவை பதவியினை முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரத்துக்கு அளிக்கப்படுமா என கேள்வி எழுப்பிய போது, சிதம்பரமும், அவரது மகனும் இருவரும் தனித்தனி குடும்பம் தான் என பதிலளித்தாா், நான் அப்போதே தீா்மானித்து விட்டேன். காங்கிரஸ் கட்சி இன்னும் மாறவில்லை என்று. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிவகங்கை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  நபரால் எந்தவித திட்டங்களும் இந்த தொகுதிக்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கு கிடைக்கவில்லை. 


தற்போது மக்களால் தோந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினா் ஒருவா், மாநிலங்களவை உறுப்பினா் ஒருவா் என இரு எம்பிகளை சிவகங்கை தொகுதி அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இவா்களால் எந்தவித திட்டங்களும் நிறைவேறப் போவதில்லை என்றாா்.

No comments:

Post a Comment

Post Top Ad