காரைக்குடி ஸ்ரீராம் நகரில் ரயில்வே மேம்பாலம் இல்லாததால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 May 2022

காரைக்குடி ஸ்ரீராம் நகரில் ரயில்வே மேம்பாலம் இல்லாததால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன.

காரைக்குடி அருகே கோட் டையூர் ஸ்ரீராம் நகரில் காரைக்குடி-அறந்தாங்கி நெடுஞ்சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில் பாதை வழியாக காரைக்குடியில் இருந்து திருச்சி, சென்னை மார்க்கத்தில் தினமும் 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர வாராந்திர ரயில்கள், சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் காரைக்குடியில் இருந்து, சாக்கோட்டை, புதுவயல், பள்ளத்தூர், கண்டனூர், அறந் தாங்கி, பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன, இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


இதையடுத்து அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென வாகன ஓட்டுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர், இதுகுறித்து காரைக்குடி தொழில்வணிகக் கழகத் தலைவர் சாமி.திராவிடமணி கூறியதாவது: ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட் வழியாக தினமும் பல ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. ரயில்வே கேட் அடைக்கும்போது இருபுறமும் ஒரு கி.மீ. தூரத்துக்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. சில சமயங்களில் ஆம்புலன்ஸ்களும் மற்ற வாகனங்களோடு காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கூறும்போது, கோட்டையூர் ஸ்ரீராம் நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார் 

No comments:

Post a Comment

Post Top Ad